News Just In

1/12/2020 01:16:00 PM

களுவன்கேணி கடற்கரை நெடுகிலும் கரையோரத்தை தூய்மையாகப் பேணும் கருத்திட்டம் அமுல்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ்; 'Active Citizens Training Programme'' களுவன்கேணி கடற் கரை நெடுகிலும் கரையோரத்தை தூய்மையாகப் பேணும் கருத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை 12.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சிலின் சமூக ஆய்வாளரும் வளவியலாளருமான ஜெயராஜ் பிரியங்கா தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சில், சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம், (Muslim Aid) தொழிற் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority) ஆகியவை இணைந்து நடாத்தும் செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தில் 'Active Citizens Training Programme'' இணைந்துள்ள இளைஞர்; யுவதிகளைக் கொண்டு கரையோரத்தையும் கடற் கரைச் சூழலையும் இயற்கை அழகு மிளரச் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நீண்ட கால மறைமுகப் பயன்களாக சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையில் சகவாழ்வு போன்றவையும் இணைக்கப்பட்டிருப்பதாக பிரியங்கா மேலும் தெரிவித்தார்.

கடற்கரையோரம் தூய்மை பேணும் சிரமதான நிகழ்வில், செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தில் இணைந்துள்ள மூவின இளைஞர் யுவதிகள், பிரதேச கரையோர சமுதாய மக்கள், பொலிஸார் உட்பட சூழலியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் பிரதேச மக்களின் பங்குபற்றலுடன் செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தில் இணைந்துள்ள பயிலுநர் இளைஞர் யுவதிகளால் 'Active Citizens Training Programme'' தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். அஷ்மி தெரிவித்தார்.













No comments: