News Just In

1/30/2020 12:19:00 AM

வெள்ளை இனத்தவரும் வேண்டிநிற்கும் வேழ முகன்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்டபஷ பிரஸ்டா மஹா கும்பாபிஷேகமானது கோலாகலமாக  வியாழக்கிழமை(30) நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில், சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கும்,ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(28) காலை முதல் இன்று புதன்கிழை வரை நடைபெற்றது. இதன்போது விநாகயகப் பெருமானுக்கு பூசைகள் இடம்பெறுவதையும், அடியார்கள் புடைசூழ எண்ணைக்காப்பு நிகழ்வுகள் இடம்பெறுவதையும் படத்தில் காணலாம்.

இதன் விசேட அம்சமாக வெளிநாட்டில் வசிக்கும் வெள்ளையின குடும்பத்தினர், ஸ்ரீ சித்தி விநாயகரின் அருள் வேண்டி எண்ணெய்க்காப்பு சாற்றும் நிகழ்வில் பக்தி பூர்வாமாக பங்கெடுத்தனர். இவர்கள் வேழ முகனை தரிசிக்க வேண்டி வெளிநாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டு வந்துள்ளமை இந்து மதத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.


























No comments: