சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது...
வியாழக்கிழமை (09.01.2020) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ சோதனைக்காக சென்ற நபரொருவர் கடமையிலிருந்த பெண் தாதி உத்தியோகத்தரை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் கடமையில் நின்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கையடக்க தொலைபேசியை கைப்பற்றினர். குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபிர்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபிர்
கிளினிக் சேவைக்காக வருபவர்களுக்கு உரிய நேரத்தில் இலக்கங்கள் விநியோகிக்கப்படும். குறித்த தாதி உத்தியோகத்தரும் அவ்வாறு இலக்கங்களை வழங்க முற்பட்டபோது அங்கிருந்த நபரொருவர் தாதி உத்தியோகத்தரை கையடக்கத் தொலைபேசியின் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார்.
இவ்விடயம் என்னிடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்று குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: