பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மாணவர்களுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அநியாயம் நேர இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் வலியுறுத்தினார். பகிடிவதை காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 200 மாணவர்கள் பலக்லைக்கழகத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழல் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்படும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் நீண்ட காலமாக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். இதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தயாராகவுள்ளார்.
வகுப்புத் தடைக்கு உள்ளாகியுள்ள மாணவர்களினதும், பகிடிவதை சட்டத்தின் கீழ் மாணவர் அந்தஸ்த்தை இழந்துள்ள மாணவர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
1/10/2020 03:04:00 PM
Home
/
உள்ளூர்
/
கல்வி
/
பல்கலைக்கழகம்
/
பகிடிவதை இந்த வருடம் முடிவிற்கு கொண்டுவரப்படும்-அமைச்சர் பந்துல குணவர்தன
பகிடிவதை இந்த வருடம் முடிவிற்கு கொண்டுவரப்படும்-அமைச்சர் பந்துல குணவர்தன
Subscribe to:
Post Comments (Atom)

No comments: