பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வட மாகாணத்தில் சில பஸ் வண்டிகள் பாடசாலை சீருடையில் இருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளமைக்கிணங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாத பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு நிறைவான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: