-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு தன்னால் முடிந்த வகையில் உதவ முயற்சிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநூராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் ஆளுநர் அவ்வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தார்.
வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு ஆளணிப்பற்றாக்குறை ஏனைய விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரை அழைப்பித்து நேரில் எடுத்துரைக்க தீர்மானிக்கப்பட்டதின் அடிப்படையில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து பணிப்பாளருமாகிய எம்.பி.எம். முஸம்மிலின் முயற்சியினால் ஆளுநர் அழதை;து வரப்பட்டார்.
இதன்போது, நேரடியாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு, ஆண். பெண் நோயாளர் விடுதிகள், பிரசவ விடுதி, வெளிநோயாளர் பிரிவு போன்றவற்றை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஈ. ராஜபக்ஸ, உட்பட ஏனைய வைத்தியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அழைத்துச்சென்று வைத்தியசாலையின் பல்வேறு பற்றாக்குறைகள், தேவைப்பாடுகளை ஆளுநருக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்வின் இறுதியில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத்தெரிவித்த ஆளுநர் தன்னால் முடிந்த சேவைகளை இவ்வைத்தியசாலைக்கு வழங்குவேன் என்று உறுதியளித்தார்.
1/30/2020 08:36:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
வாழைச்சேனை
/
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு உதவுவேன்-கிழக்கு மாகாண ஆளுநர்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு உதவுவேன்-கிழக்கு மாகாண ஆளுநர்
Subscribe to:
Post Comments (Atom)






No comments: