தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பல வருடங்களாக பீடாதிபதிகளாக செயற்பட்டதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த இந்நிலைமையினால், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளை (13.01.2020) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு தகுதிவாய்ந்தோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1/12/2020 08:39:00 PM
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments: