News Just In

1/31/2020 06:07:00 PM

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் பின்லாந்து தூதுவர், அரசாங்க அதிபர் சந்திப்பு

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று காலை இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த சந்திப்பானது கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் முதலாவதாக பல்லின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற இம் மாவட்டத்தினை நான் பார்க்கிறேன் எனவும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீன முறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதி வாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழு ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் மாவட்டஅரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர் மற்றும் மாவட்ட மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.

No comments: