News Just In

1/29/2020 06:44:00 PM

நூற்றாண்டைக் கடந்த அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு விழா


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஒரு நூற்றைண்டைக் கடந்த ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு விழா ஜனவரி 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக கல்லூரி நிருவாகம் அறிவித்துள்ளது.

அன்றை தினம் அலிகார் விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து நிகழ்வகள் கோலாகலமாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ் உமர்மௌலானா உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர் பாதுகாவலர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொள்கின்றனர்.

No comments: