இலங்கையில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தவதற்கும் சுகாதார சுட்டெண்ணின் அதிகரிப்புக்காகவும் 2020-2022 ஆண்டு திட்டத்துக்காக 20 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு சர்வதேச நிதியம் உடன்பட்டுள்ளது.
சர்வதேச நிதியத்தின் திட்டப் பணிப்பாளர் திருமதி புபுது டி சொய்சாவுக்கும் சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சிக்கும் இடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது
நாட்டில் காச நோய், மலேரியா மற்றும் பாலியல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 18 வருடங்களாக இந்த நிதியம் இலங்கைக்கு 18.3 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியுள்ளது
1/13/2020 12:44:00 PM
சர்வதேச நிதியத்தில் இருந்து சுகாதார திட்டத்துக்காக 20 மில்லியன் யூரோக்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: