News Just In

1/13/2020 12:30:00 PM

அதிரடிப்படையினர் மீது அம்பாறையில் தாக்குதல் நடத்திய நால்வர் கைது

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் உஹன, லாகுகல பிரதேச வனப் பகுதியில் மரங்களை வெட்டி ஏற்றிக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி அதனைக் கொண்டு சென்றபோது

முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் அவர்களை இடைமறித்து அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்து பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: