News Just In

1/30/2020 07:30:00 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் 201 பேருக்கு டெங்கு! ஒருவர் பலி!!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம்-2020 ஜனவரி 24ஆம் திகதி வரையும் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும், ஆரையம்பதி 35, களுவாஞ்சிகுடி 21, வாழைச்சேனை 16, செங்கலடி 22, காத்தான்குடி 14, ஏறாவூர் 05, வெல்லாவெளி 04, வவுணதீவு 06, பட்டிப்பளை 06, ஓட்டமாவடி 10, கோறளைப்பற்று மத்தி 18, கிரான் 06 பேர் என்ற அடிப்படையில் டெங்கு நோய்க்கு ஆட்கள் உள்ளாகியிருப்பதுடன் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதென வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

No comments: