பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக் கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 50 ரூபாவால் குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்

No comments: