
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களூடாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புதல் எனும் மையப் பொருளிலான செயலமர்வு இன்று (06) மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல் ஆகியோரும்
வளவாளர்களாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட இணைப்பாளர் அன்ரன் ஹப்ரியல் கலந்து கொண்டனர்.
இன நல்லிணக்கத்தினை உருவாக்குவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் தேவையினை பிரதிபலித்தும், நல்லிணக்கத்தினை உருவாக்க துறை சார்ந்த பங்களிப்பின் அவசியம் பற்றியும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











No comments: