News Just In

12/07/2019 11:06:00 AM

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டங்கள்

புதிய அரசாங்க கொள்கை அறிக்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே தமது நோக்கமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சில் நேற்று (06) இடம்பெற்ற காலாண்டு பயிற்சி திட்டங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

2020 – 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக சுற்றலா அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: