மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட் இருதயபுரம், கறுவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம்,புன்னைச்சோலை உட்பட பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர் ஆகியோர் நேரடியாக பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளையும் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.









No comments: