News Just In

12/08/2019 09:27:00 AM

எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை-நிதியமைச்சு

எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்துவதற்கோ அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் எரிபொருள் விலை சூத்திரமானது 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் அதிகரிப்பு, குறைப்பு என்பவற்றுக்கு ஏற்றவாறு மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருள் விலையானது மாற்றம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: