News Just In

12/08/2019 08:43:00 AM

பெண்கள் பாதுகாப்புக்காக கூகிளின் புதிய திட்டமான ஒளிரும் பாதை அறிமுகம்

பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையை கருத்தில் கொண்டு கூகிள் மேப் (Google Maps) ஒளிரும் பாதை எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பான பாதையில் வீட்டை நோக்கி நடக்க உதவுவதற்காக கூகிள் மேப் பிரகாசமாக ஒளிரும் தெருக்களை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு அதன் சேவையில் ஒரு புதிய அம்சத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"லைட்டிங்` எனப்படும் புதிய அம்சம் மூலம், பயனர்கள் அதிக வெளிச்சம் உள்ள தெருக்களை அடையாளம் காண உதவும். வரும் நாட்களில் மஞ்சள் வண்ண சிறப்பம்சத்துடன் நல்ல ஒளியுடன் கூடிய தெருக்களை இந்த அம்சம் சிறப்பிக்கும். அதன் மூலம் பயனர்கள் விளக்குகள் இல்லாத தெருக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: