News Just In

12/06/2019 03:44:00 PM

ஆரையம்பதி குளத்தால் வெள்ளநீர் வடிந்தோடுவது தடை- காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்!


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இயல்பாக இயற்கை வழியாக வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய தோணா வழியைத் தடைசெய்து சட்டவிரோதமாகக் குளம் அமைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை 06.12.2019 காத்தான்குடி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தலைவர்  எஸ்.எச்.எம். அஸ்பர்   தலைமையில் இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணில் காத்தான்குடியில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர், ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மக்களின் காணிகளை அடாத்தாக அபகரித்து தேவையற்ற விதத்தில் எதற்கும் பிரயோசனமில்லாமல், ஊர் மத்தியிலே அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றினால் இயற்கையாக நீரோடும் வழி தடைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்து சுமார் 5000 முஸ்லிம் குடும்பங்களும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுடைய ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, இந்நிலைமைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும் என்று கோரியே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.





No comments: