News Just In

12/11/2019 08:00:00 AM

மருந்து கட்டச் சென்றவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல்!

மருந்து கட்­டு­வ­தற்குச் சென்ற இருவர் வைத்­தி­ய­சாலைப் பணி­யா­ளர்­களைத் தாக்கி காயப்­ப­டுத்­தி­ய­துடன் தள­பா­டங்­க­ளையும் சேத­மாக்­கி­யுள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் தெரியவருவதாவது 
சாவ­கச்­சேரி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு வெட்­டுக்­கா­யத்­துடன் மருந்து கட்­டு­வ­தற்­காக இரண்டு இளை­ஞர்கள் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றுள்­ளனர்.

அவர்­க­ளுக்கு மருத்­துவ பரி­சோ­த­னைக்குப் பின் மருந்து கட்ட வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்கள் நட­வ­டிக்கை எடுத்­துக்­கொண்­டி­ருந்த போது, அவர்கள் தமக்கு உட­ன­டி­யாக மருந்து கட்­ட­வில்லை எனத் தெரி­வித்து வைத்­தி­ய­சாலைப் பணி­யா­ளர்­க­ளையும் தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் தாக்கிக் காயப்­ப­டுத்­தி­ய­துடன் வைத்­தி­ய­சாலை தள­பா­டங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

கட­மை­யி­லி­ருந்த பாது­காப்பு பணி­யா­ளர்­க­ளையும் இரும்பு கம்­பி­களால் தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர். இதன்­போது அங்கு குழு­மிய அப்­ப­குதி இளை­ஞர்கள் இரு­வ­ரையும் மடக்கிப்பிடித்து தாக்கி சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். இருந்த போதும் ஒருவர் கைவி­லங்­கோடு பொலி­ஸா­ரிடம் இருந்து தப்­பித்து ஓடி­யுள்ளார்.

எனினும் இளை­ஞர்கள் மீண்டும் அந்த இளை­ஞரைப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். சந்­தேக நபர்கள் இரு­வரும் வேறு வழக்­கு­களில் நீதி­மன்­றத்தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்கள் என்று பொலிஸார் தெரி­வித்­தனர்.இந்­தச்­சம்­பவம் தொடர்­பாக சாவ­கச்­சேரி பொலிஸார் விசா­ர­ணை­களை முன்னெடுத்துள்ளனர்.

No comments: