நேற்று (7) பி.ப 2.00மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர், மாலை 6.00மணிவரை சாட்சியம் வழங்கினார். இதன்போது இரண்டு மணித்தியாலங்கள் அவரிடம் இரகசியமாகவும் சாட்சியம் பெறப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகள் அடங்கலாக எட்டு இடங்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எனது பக்கம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தேன். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நாம் வழங்கும் சாட்சியங்களின் அடிப்படையில் ஆணைக்குழு ஏனையவர்களிடம் விசாரணை செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்கும் என்றும் கூறினார்.
நேற்று முன்தினம் (6) மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியதோடு , நேற்றும் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: