News Just In

12/08/2019 07:17:00 AM

வரி குறைப்பினால் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் புனித பூமியில் வழிபாடுகளில் இன்று காலை ஈடுபட்டார்.

அதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், வரிகள் சில நீக்கியமை மற்றும் சில வரிகளை குறைத்தமையினால், முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளதாக கூறினார்.

ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபட்ட பின்னர் றுவன்வெலி ஷாய சைத்தியாராமாதிபதி சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்ன நாயக்க தேரையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து நல்லாசி பெற்றார்.

No comments: