News Just In

12/08/2019 02:11:00 PM

மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர் பாடசாலையின் பட்டமளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பட்டமளிப்பு நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திருமதி.ஏ.சுவர்ணராஜ் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இயேசு சபைத்துறவி அருட்பணி ரீ.சகாயநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் எஸ்.சசிதரனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

சிறார்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்ட அதிதிகள் பாண்டு வாத்திய இசை முழங்க வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, இறை வணக்கத்துடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து பிளே குறுப், எல்.கே.ஜீ மற்றும் யூ.கே.ஜீ மாணவர்களினால் அழகிய கண் கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்களின் பேச்சு மற்றும் பல்வேறு திறமைகள் இதன்போது வெளிக்கொணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், எதிர்வரும் வருடம் தரம் ஒன்றிற்கு செல்லவிருக்கும் அப்ப கிறேட் மாணவர்களுக்கான பட்டமளிப்பும் இடம்பெற்றதுடன், நத்தார் தாத்தாவின் விசேட பரிசு வழங்கள் மற்றும் அழகிய நடனத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றிருந்தது.














No comments: