
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் வீடு வீடாகச் சென்று டெங்கு அபாயத் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கனதியான மழை, தேங்கி நிற்கும் நீர் நிறைந்த சூழலில் டெங்கு அபாயம் ஏற்படக் கூடும் என்பதால் இத்தகைய முன்னாயத்த நடவடிக்கைகளை தாம் வீடுவீடாகச் சென்று மேற்கொண்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 தொடங்கப்பட்டுள்ள இப்பணிகள் வானிலை சீரடையும் வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெங்குசு அபாயத் தடுப்பு நடவடிக்கையின்போது வீட்டிலும் அயல்புறங்களிலும் பாழடைந்த இடங்களிலும் வீசப்படும் தகரப் பேணிகள், சிரட்டைகள், சட்டிகள், குவளைகள் போன்றவற்றை முதற்கட்டமாக அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



No comments: