News Just In

12/08/2019 01:32:00 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் உணவுப் பொதிகள்-முன்னாள் முதலமைச்சர்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சமீப சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையின் காரணமாக கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சுமார் 10 ஆயிரம் உணவுப் பொதிகள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் அறக்கொடை நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டதாக அறக்கொடை நிறுவனப் பிரதிநிதியும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான ஏ.எஸ்.எம். ஸரூஜ் தெரிவித்தார்.

சமீப சில நாட்களாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சமைப்பதற்கு வழியின்றி துயரங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு வீடுவீடாகச் சென்று இவ்விதம் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருவதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை 05.12.2019 இரவு தொடக்கம் இவ்விதம் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் முதலமைச்சரின் தனிப்பட்ட நிதி அனுசரணையில் நஸீர் ஹாபிஸ் பௌண்டேஷன் அறக்கொடை நிறுவனத்தினூடாக நாளாந்தம் ஒருவேளைக்கு சுமார் ஆயிரம் சமைத்த உணவுப் பொதிகள் என்ற அடிப்படையில் பகல், இரவு உணவுகள் இவ்விதம் வழங்கப்படுகின்றன.

முஹாஜிரின் கிராமம், ரூபி முஹைதீன் கிராமம், ஸம்ஸம் கிராமம், தாமரைக்கேணி, தாவூத் கிராமம் தக்வா பள்ளி, ஹிஸ்புல்லாஹ் நகர், ஹிதாயத் நகர், ஸக்காத் கிராமம், ஹிக்மி கிராமம், சவுக்கடி போன்ற கிராமங்களிலுள்ள வறிய மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் ‪ வழங்கப்படுகின்றன.






No comments: