News Just In

12/30/2019 12:31:00 PM

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மீது தாக்குதல் முயற்சி-பாதுகாவலர் படுகாயம்


வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் மீது நேற்று இரவு (29.12) தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது பாதுகாவலர் கையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா பாவறகுளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி சென்ற நிலையில் பாவற்குளம் கிராமப்பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்தில் கே.கே.மஸ்தான் எம்.பியும் சென்றுள்ளார்.

இதன் போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர்.

இதன் போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளது.

இந் நிலையில் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடிய நிலையில் காயமடைந்த பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: