News Just In

12/06/2019 05:30:00 PM

தங்கப்பதக்கம் வென்ற மட்டக்களப்பு மாணவனின் கண்டுபிடிப்பு தாய்வான் சர்வதேச கண்காட்சிக்கு தெரிவு!


மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் சக்திக்குமார் பிரஜித்  கண்டுபிடித்த ஹம்மர் ஹெல்பெர் (Hammer Helper) தற்பொழுது தாய்வானில் இடம்பெற்றுவரும் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது.

இலங்கையில் விஞ்ஞானம் தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குவினால் வருடாவருடம் நடாத்தப்படும் சகசக் நெமவும் தேசிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த Hammer Helper முதலிடத்தையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது.

தங்கப்பதக்கத்தை வெற்றியீட்டிய இவரது கண்டுபிடிப்பு தற்போது தாய்வான் நாட்டில் நடைபெறும் சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது டிசம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் தாய்வானில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments: