கலால் திணைக்களத்தினால் கடந்துபோன 11 மாதங்களில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டோர்களுக்கு நீதி மன்றத்தினால் 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த 11 மாத காலத்தில் 30,902 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 42,979 பேர் கலால் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பின் போது 50 கோடி ரூபா பெறுமதியான அனுமதி பத்திரங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான வகைகள் மற்றும் உபகரணங்கள், சட்டவிரோத புகையிலை உற்பத்திப் பொருட்கள் ஆகியன அடங்குவதாகவும், கலால் திணைக்கள வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments: