கட்டநாயக்க விமான நிலைய வளவிலும் அதனை அண்டியுள்ள பிரதேசத்திலும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதற்கு அருகாமையில் புதிய வாகன திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த வாகன திட்டம் கடந்த சில தினங்களில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றியடைந்துள்ளமையினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
01. விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விமான நிலையத்திற்கு பிரவேசிக்க வேண்டும்.
02. வரும் மற்றும் வெளியேறும் முனையத்திற்குள் (terminal) பிரவேசிப்பதற்கான முறை வீதி சமிக்ஞை மூலம் காட்டப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பிரிவினால் தேவையான வளிகாட்டிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
03.மினுவான்கொடையில் இருந்து வரும் மற்றும் மினுவாங்கொடையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் முன்னரைப் போன்று கட்டுநாயக்க மினுவான்கொடை வீதியைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
04.கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதி ஊடாக வரும் முனையத்தில் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக இது வரையில் இருந்த நுழைவாயில் மூடப்படுவதுடன் இந்த வாகனங்கள் விமான நிலைய பிரதான வாயிலில் பிரவேசிப்பதன் மூலம் விமான நிலையத்திற்குள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: