News Just In

11/28/2019 06:15:00 PM

பாடசாலை மாணவர்களுக்கான Tab, சுரக்ஷா காப்புறுதி ஆகியன இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு டெப்களை (Tabs) வழங்குதல் மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: