டெங்கு நோய் பரவும் சூழ்நிலை காணப்படுவதனால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு கருதி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
பரீட்சை ஆரம்பிக்க முன்னர் அல்லது ஞாயிறு தினங்களில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறித்த நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை காலம் முடிவுற்று 2020 ஆம் ஆண்டின் முதலாம் தவனைக்காலம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் பெற்றோர்களை இணைத்துக கொண்டு பாடசாலை சுற்று சூழலை டெங்கு நுளம்பு தாக்கமற்ற பாதுகாப்பான சுற்று சூழலாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் கல்லூரிகளிலும் வலய மற்றும் வட்டார கல்வி காரியால நிறுவனங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
11/28/2019 05:21:00 PM
பாடசாலைகளில் டெங்கு நோய் பரவும் சூழலை கட்டுப்படுத்த கல்வி அமைச்சு ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)

No comments: