News Just In

11/20/2019 09:59:00 AM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசமுறைப் பயணமாக இந்தியா செல்லவுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரச முறைப் பயணமாக எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியைத் தெரிவித்த இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரச முறைப் பயணமாக இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்திருப்பதாவும் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: