
மட்டக்களப்பு கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் இறுதி அஞ்சலி நிகழ்த்துவதற்கான மண்டபத்திற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த அஞ்சலி கட்டடமானது கட்டாரில் அமைந்துள்ள PLAZA HOLLANDI நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை ஊழியர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ளது.
PLAZA HOLLANDI நிறுவன முகாமையாளர் பாலசுப்பிரமணியம் கங்கேஸ்வரன் (ஈசன்) அவர்களின் ஆலோசனைக்கு அமைய 2.5 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அஞ்சலி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், நிதி வழங்குநர் பாலசுப்பிரமணியம் கங்கேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு கல்வி காலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த அஞ்சலி மண்டபத்தில் தேவை ஏற்படுமிடத்து மரணித்தவரின் உடலத்தை நீண்ட நேரம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி மண்டபம் அமைப்பதற்கான செயல்திட்டத்தை மட்டக்களப்பு-கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் மேற்கொள்கின்றது.
அஞ்சலி மண்டபம் அமைப்பதற்கான செயல்திட்டத்தை மட்டக்களப்பு-கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் மேற்கொள்கின்றது.
















No comments: