அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் மலையடிவாரம் பகுதியில் இன்று (29.11.2019) வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அக்கரைப்பற்று, சின்னபனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு நாட்களாக காணாமற்போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: