இன்று(19) மட்டு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்
62 வருடங்களாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது, அதனை மக்களுக்கு தெளிவு படுத்தி கிழக்கு மாகாணத்தை மீட்க வேண்டும் எனும் கோசத்துடனேயே நாங்கள் பயணிக்கின்றோம்.
அதை இந்த ஜானதிபதி தேர்தலில் நிருபித்துக் காட்டியிருக்கின்றோம். வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கலாம், இருப்பினும் கிழக்கை மீட்ப்போம் எனும் கோசம் எங்களுக்கு வெற்றியளித்திருக்கின்றது.
கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் எதிர் திசைகளில் பயணித்து நாட்டினை சீர்குலைத்துள்ளனர். அதனால்தான் முஸ்லீம் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல் போன்றன ஏற்பட்டன, அது இந்த ஆட்சியில் இடம்பெறாது.
தற்போது ஜானதிபதியினை விட பாராளுமனத்திற்கு அதிகாரம் அதிகரித்திருக்கின்றது, இரண்டும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அதனை சார்ந்த கட்சியினை சேந்த உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும், சும்மா ஆசனத்தை சூடாக்கி கொண்டு இருக்கக் கூடாது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஜநாயக ரீதியான கட்சி அதனை கடந்த தேர்தல்களின் வாயிலாக நிருபித்துக் காட்டியிருக்கின்றோம், வருகின்ற மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களையும் இந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை துடுப்பாக பாவித்து தேர்தலில் நிற்போம் என இதன் போது தெரிவித்தார்.


No comments: