News Just In

11/21/2019 11:49:00 AM

மட்டக்களப்பில் செயற்பாட்டுக் குடிமக்கள் செயற்திட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையில் சகவாழ்வு போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைத்து செயற்பாட்டுக் குடிமக்கள் எனும் செயற்திட்டம் இடம்பெற்று வருவதாக சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். அஷ்மி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம், (Muslim Aid) தொழிற் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority) ஆகியவை இணைந்து செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டம் 'Active Citizens Training Programme'' திட்டத்தின் ஒரு அங்கமாக 'இளைஞர்களும் சமூக மீள் எழுச்சியும் Youth and Community Resilience” செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.

இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் கள ஆய்வுகளில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமுலாக்கப்படக் கூடிய பரீட்சார்த்த திட்டங்களை சமூகங்களுடன் இணைந்து வடிவமைக்க உள்ளனர் என்றும் சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷ்மி, மேலும் தெரிவித்தார்.



No comments: