News Just In

11/23/2019 08:09:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மகள் உயிரிழந்தமைக்கு அரசாங்கத்திடம் நட்ட ஈடு கோரும் அமெரிக்க வைத்தியர்

அலெக்சாண்டர் ஏலோ என்ற அமெரிக்க வைத்தியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தன்னுடைய 12 வயது மகள் உயிரிழந்தமைக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குண்டு தாக்குதல் நடத்தப்படும் என புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையால் பாரிய அனர்த்தத்தை சந்திக்க நேரிட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
************
நீதிமன்றம் தொடர்பான செய்திகளுக்கு தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை VTN செய்திக் குழுமம் தடைசெய்துள்ளது என்பதனை தங்களுடைய மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

No comments: