News Just In

11/22/2019 12:29:00 PM

பேஸ்புக் தளத்தின் நட்பு வட்டாரத்தை பயன்படுத்தி பல லட்சம் மோசடி!

உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் தளத்தின் மூலம் பல்வேறு பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாவின் ஆந்திரா விசாகப்பட்டின நிறுவனமொன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் குமார் தாஸ். இவருடைய பேஸ்புக்கில் பெண் பெயர் கொண்ட கணக்குகளில் இருந்து நண்பர் வேண்டுகோள்கள் (Friend Requests) வந்துள்ளன.

அதனை ஏற்றுக்கொண்ட பின்பு குமார் தாஸை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு ஓய்வு பெற்ற உங்களை கௌரவிக்கும் விதமாக மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் சிறு ஆபரணங்கள், 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் ஆகியவற்றில் பார்சலில் அனுப்பி வைக்கிறேன் என்று ஒருவரும் மற்றைய பெண் வெளிநாட்டில் இருந்து ஏரளாமான அளவில் பரிசுப்பொருட்களும் வந்திருக்கின்றன அவற்றுக்கு உரிய சுங்க கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

இவற்றை உண்மை என நம்பி குமார் தாஸ் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கில் தவணை ரீதியாக 34லட்சத்து 19ஆயிரத்து 450ஆயிரத்து 450 ரூபா பணத்தை வைப்புச் செய்தார். இதன் பின்னர் குறித்த பெண்கள் இருவரையும் அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்த குமார்தாஸ் காவல்துறையில் புகார் கொடுக்க வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மோசடி கும்பல் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. உடனே டெல்லிக்கு சென்ற போலீசார் அங்கு ஹரியானாவை சேர்ந்த கிஷன் லால் உட்பட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். 
இந்த விசாரணையில் கிஷன் லால் நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவருடன் கூட்டணி அமைத்து பேஸ்புக்கில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2லட்ச ரூபாய் தொகை, 95 சிம் கார்டுகள், ஐந்து ஏடிம் கார்டுகள், 7மொபைல் போன்கள் காலாவதியான பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

No comments: