News Just In

11/22/2019 10:34:00 AM

புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்-முழு விபரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதாரம், கொள்கை வகுப்பு, புத்த சாசன மத அலுவலகள், நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் வீடமைப்பு துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, பிரதமர் உள்ளிட்ட மேலும் 15 பேர் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
01. டக்ளஸ் தேவானந்தா
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்

02. ஆறுமுகன் தொண்டமான்
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்

03. விமல் வீரவங்ச
சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்

04. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

05. சமல் ராஜபக்ஸ
மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்

06. ஜனக்க பண்டார தென்னக்கோன்
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்

07. பந்துல குணவர்தன
தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்

08. பவித்திரா வன்னியாராச்சி
மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

09. தினேஸ் குணவர்தன
வௌிநாட்டு உறவுகள், திறண் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்

10. நிமல் சிறிபால டி சில்வா
நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

11. டலஸ் அழகப்பெரும
கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

12. மஹிந்த அமரவீர 
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்

13. எஸ்.எம்.சந்திரசேன 
சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்

14. ரமேஸ் பத்திரண
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்

15. பிரசன்ன ரணதுங்க
கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

No comments: