News Just In

11/30/2019 06:47:00 PM

முச்சக்கர வண்டியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

முச்சக்கர வண்டியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று (29) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் வேனும் மோதி இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வேன் மீது மாடு மோதியதில் கட்டுப்பாடடையிழந்த வேன் ஆட்டோவில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 62 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: