News Just In

11/30/2019 06:08:00 PM

மட்டக்களப்பு பகுதியில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்கவைப்பு!

மட்டக்களப்பு காஞ்சிரம்குடா வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிகுண்டு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (30.11.2019) மீட்கப்பட்டு அப்பகுதியில் வெடிக்கவைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர் .

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள குறித்த பகுதியில் வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் மண் அகழ்வப்பட்ட நிலையில் உள்ள பகுதியில் கைக் குண்டுகள் இருந்துள்ளதை கண்டு அங்கு விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்

இதனையடுத்து குறித்த பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையின் பார்வையிட்டு அதனை வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று அந்த பகுதியில் மண்அகழ்வும் இயந்திரம் கொண்டு இன்று சனிக்கிழமை (30) பகல் மேலும் தேடுதல் ஈடுபட்ட நிலையில் 24 கைக்குண்டுகளை மீட்டு உடனடியாக வெடிக்கவைத்தனர் .

கடந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியான இந்த பகுதியிலுள்ள இந்த மண் மேட்டில் விடுதலைப்புலிகள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதுடன் இந்த மண்மேடு மண்அகழ்வின் பின்னர் தற்போது பெய்துவரும் கனமழiயினால் மண் அரிக்கப்பட்டு இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: