News Just In

11/23/2019 09:22:00 AM

கூகுள் தேடுபொறியினை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

தேடுபொறிகளில் கூகுள் அத்தியாவசியான ஒன்றாக மாறியுள்ளது. கேள்விக்கான பதிலோ, பிரபலங்கள் குறித்த விபரமோ அல்லது செய்தி, வரலாறு, மருத்துவம் என அனைத்தும் கூகுளில் தேடி படிக்கலாம்.

பொதுவாக அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகம் படிப்பது வழக்கம். ஆனால் இப்போது அந்த புத்தகமே கூகுளில் தேடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இருந்தாலும் கூகுளில் ஒரு சில விஷயங்களை தேடினால் அது நமக்கே ஆபத்தாகவும் சிக்கலாகவும் முடியலாம்.

வங்கி
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிந்தால் மட்டுமே பயன்படுத்தவும். கூகுளில் வங்கியின் பெயரை மட்டுமே டைப் செய்து தேடினால் அசல் போன்றே இருக்கும் போலியான வலைதளத்திற்கு சென்றுவிடும் அபாயமும் உள்ளது. இந்த போலி வலைத்தளங்கள் உள்ளே நுழைவதற்கு கேட்கப்படும் சில தரவுகளை வலைத்தளத்தை சரிபார்க்காமல் பூர்த்தி செய்தால் வாங்கி தொடர்பான தகவல்கள் திருடப்பட்டு பணம் பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.

சேவை மையம்
போலியான இணையதளங்கள் தவறான எண்களை காண்பிக்கும் அந்த இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டால் உண்மையான சேவை மைய ஊழியர்கள் போல் பேசி தங்கள் தரவுகளை எளிதாக திருடி விடுவார்கள். பின்னர் எண்களை மற்ற வணிக நிறுவனங்களுக்கு பகிர்ந்து விடவும் வாய்ப்பு உண்டு. அதன்பின் பொருள்கள் விற்கும் விற்பனையாளர்கள் அடிக்கடி அழைப்பினை மேற்கொள்ளவும், குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்யவும் நேரிடும்.

செயலி பதிவிறக்கம்
பொதுவாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யவும். ஒரு செயலியை கூகுளில் சென்று தேடும்போது அது தாமாக மற்ற பக்கத்துக்குள் நுழைந்து வேறு செயலிகள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகலாம். அப்படி டவுன்லோட் ஆகும் செயலிகளை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம். ஆனால் அந்த செயலிகள் மால்வேர் என்ற ஹேக்கர்கள் பயன்படுத்தும் செயலிகளாக தொழிற்பட்டு எமது தனிப்படட தகவல்களை திருடும் வாய்ப்பு அதிகமுண்டு.

உடல் சார்ந்த விடயங்கள் 
உடலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதை முறையாக மருத்தவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு கூகுளில் தேடினால், அது மிகப்பெரிய தவறாக முடியலாம்.

இடது புற மார்பகப்பகுதி வலிப்பதற்கான காரணம் என்னவென்று கூகுளில் தேடினால் அது கிட்னி  கோளாறு என்றும் காண்பிக்கும். எனவே முறையாக மருத்துவரிடம் காட்டுவது நல்லது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கூகுள் தேடுபொறியினை பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக செயற்படவும்!

No comments: