மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 102.4 மில்லி மீற்றர்,
நவகிரி குளம் 96.1 மில்லி மீற்றர்,
தும்பங்கேணி 74.0 மில்லி மீற்றர்,
மயிலம்பாவெளி 65.3 மில்லி மீற்றர்,
பாசிக்குடா 23.0 மில்லி மீற்றர்,
உன்னிச்சை 111.0 மில்லி மீற்றர்,
வாகனேரி 40.7 மில்லி மீற்றர்,
கட்டுமுறிவு குளம் 27.0 மில்லி மீற்றர்,
உறுகாமம் 103.5 மில்லி மீற்றர்,
கிரான் 20.5 மில்லி மீற்றர்
மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றமையினால் விவசாய பயிர் செய்கை நிலங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகளும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுகின்றது.
அத்தோடு தொடர் மழை காரணமாக வாழைச்சேனை, பாசிக்குடா, வாகரை, ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், அன்றாட தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தள்ளப்பட்டுள்ளதுடன், வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் சிலரது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் குளங்களில் வான் கதவுகள் திறக்கும் பட்சத்தில் பல தாழ்நில கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகக் கூடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனர்த்தக் குழு, தொடர்ந்தும் தயார் நிலையில் செயற்பட்டு அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், படகுச்சேவை, அனர்த்த நிவாரண சேவை, பாதுகாப்பு பிரிவு, பொதுமக்கள் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், நீர் நிலைகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: