திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் தேவாலயம் செல்வதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள தனது மகளுடைய வீட்டிலிருந்து வெளியில் புறப்பட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் அவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தேவாலயத்திற்குச் செல்வதாகக் கூறிய அவர் அங்கு செல்லாமல் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். திருகோணமலைக்குச் செல்வதற்கான பயணச் சீட்டை அவர் பெற்றிருந்த நிலையில் இடைவழியில் பனிச்சங்கேணி பாலத்தினை அண்மித்த பகுதியில் இறங்கியுள்ளாரென தெரியவந்திருப்பதாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.



No comments: