News Just In

11/22/2019 02:37:00 PM

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர் சஜித்துக்கு வழிவிட்டு அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும் என தெரிவித்துள்ளார்.

எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: