News Just In

11/22/2019 11:23:00 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்பு தாக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 15 திகதி வரையும் 91பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1419பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளனர். இதில் இரண்டு பெயர் இந்தமாதம் உயீர் இளந்துள்ளனர் இதில் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும் ஏறாவூர் பகுதியில் இருந்து ஒரு மரணமும் என இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கலாநிதி வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.

இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு பிரிவில் இதுவரை 34 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று செங்கலடி 18பேர்; ஆரையம்பதி 10பேர் வெல்லாவெளி 06பேர் வாழைச்சேனை, வவுனதீவு தலா 05பேர் ஆகிய பகுதியில்; இனங்காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்தவாரம் 91பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் கழிவுகள் அப்புறப்புடத்தப்பட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: