உழைக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்தனவின் ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினார். கொஸ்கம, பொருளுகொடவில் அமைந்துள்ள தூபிக்கு அருகாமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டார்.
தொழில் அமைச்சின் ஊடாக பாட்டளி மக்களின் சேம நலனுக்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன அங்கு மேலும் தெரிவித்தார்.


No comments: