இந்த சந்திப்பின் போது, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி புதிய அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார திட்டங்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அமைச்சருடன் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார் .
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார சேவையின் பணிகள் மற்றும் திட்டங்களில் உலக சுகாதார அமைப்பினை உதவுமாறு உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நோக்கத்திற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்கனவே பல சிறப்பு திட்டங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் , பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியராச்சி நியமிக்கப்பட்டதற்கு இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

No comments: