(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாவனையாளர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை (27.11.2019) மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வின் பிரதான நோக்கம் மக்கள் மத்தியில் நேர்மையான வியாபார சூழலையும் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களையும் உருவாக்குவதாகும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
மேலும், பாவனையாளர்களை வலுப்படுத்தலும் சந்தையை ஒழுங்குபடுத்தலும் வியாபார போட்டியை ஊக்குவிப்பதன் மூலம் பாவனையாளருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்வதாகும்.
அத்துடன், பாவனைக்கு பொருந்தாத பொருட்களை தடைசெய்வதும் கட்டுப்பாடு விலையினை மீறி கூடிய விலையில் பொருட்களை விற்கின்ற வர்த்தர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாவனையாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதும் விழிப்பூட்டலின் நொக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர்கள் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தரமானவையாகவும் விலை கட்டுப்பாடுக்கு உள்ளடங்கியவையாகவும் அமையாதவிடத்து அப்பொருட்களை வர்த்தகரிடம் மீண்டும் கையளித்து தாம் செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சட்டத்தின் மூலமாக ஏற்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளில் குறைபாடு அல்லது தரக்குறைவு காணப்படும்பட்சத்தில் பொருளைக் கொள்வனவு செய்த வியாபாரியிடம் உரையாடி சரி செய்து கொள்ளப்படாத நிலையில் 90 நாட்களுக்குள் எழுத்து மூலமான முறைப்பாட்டினை பாவனையாளர் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்புகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கு ஏதுவான தீர்வை பெறமுடியும் போன்ற விவரங்கள் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)












No comments: