News Just In

11/30/2019 11:10:00 PM

மட்டு மாநகர சபையால் இருதயபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னெடுப்பு


இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருததி சங்கத்தின் கேரிக்கைக்கு அமைய  இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நன்மை கருதி வெள்ள நீரை வெளியேற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது.

இப் பணியில் வட்டார மாநகரசபை உறுப்பினர் து. மதன் தலைமையில் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் தீபாகரன்  இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது மழை காலம் என்பதால் மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது, இதனை மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபை ஊழியர்கள் கால்வாய் வெட்டி நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments: